‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருந்த ‘ஜகமே தந்திரம்’ படம்.

மே 1ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டது படக்குழு.

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ரகிட ரகிட’  பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. மோஷன் பிக்சர் ரிலீஸாகும்போது அனைவரையும் கவர்ந்தது இந்த ரகிட ரகிட பி.ஜி.எம் என்பது குறிப்பிடத்தக்கது .

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.

இந்நிலையில் படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை பார்க்கையில், லண்டனில் வரும் முக்கிய காட்சிகளில் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.