தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் முதன் முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் ஜகமே தந்திரம். பேட்ட படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தினை இயக்கி உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது .

ஜகமே தந்திரம் படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவருவதாக பரவிய வதந்தி பற்றி கார்த்திக் சுப்புராஜ் “தற்போதைக்கு தயாரிப்பாளரிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை. நிச்சயமாக தியேட்டர் திறக்கப்பட்ட பிறகு ரிலீஸ் செய்வோம்” என கார்த்திக் சுப்புராஜ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.