‘ஜகமே தந்திரம்’ படத்தின் தெறிக்கவிடும் போஸ்டர் வெளியீடு…!

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தை YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜகமே தந்திரம் திரைப்படம் உழைப்பாளர்கள் தினமான மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் தனுஷின் கதாபாத்திரம் சுருளி என பதிவிட்டு விரைவில் வருகிறான் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் தனுஷ் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.