ஒய்எஸ்ஆர் காங். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கத்திக்குத்து: விமான நிலையத்தில் பரபரப்பு

விசாகப்பட்டினம்:

ய்எஸ்ஆர் காங். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தினார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஐதரபாத்துக்கு திரும்பும் வகையில், விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வந்தார். அப்போது, அவர்மீது  யாரோ மர்ம நபர் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கினார். இந்த தாக்குதல் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது கையில் தோள்பட்டை அருகே விழுந்தது. இதன் காரணமாக அவரது கையில் இருந்து ரத்தம் வழிந்தது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், ஜெகன்மோகன் ரெட்டியை தாக்கிய நபரை கைது பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர் விமான நிலைய கேன்டீனில் பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும், ஜெகன் மோகன் ரெட்டியுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது, அவர் தடுத்ததால், தன்னிடம் இருந்து ஆயுத்தால் தாக்குதல் நடத்தியதாக கூறி உள்ளார். அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதம் சேவல் சண்டைக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதம் என  காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த தாக்குதல்  தெலுங்கு தேசக் கட்சியின் சதி என ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.