ஆந்திராவில் பங்கெடுப்பு பென்ஷன் திட்டம் ரத்தாகுமா?

அமராவதி: புதிதாகப் பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசினுடைய முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎஸ் எனப்படும் பங்கெடுப்பு பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‍ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று 9 நாட்கள் கழித்து, அவரின் கட்சியைச் சேர்ந்த 25 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அவர்களில் 5 பேர் துணை முதலமைச்சர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெகன் ‍அமைச்சரவையில் இடம்பெற்றோரில் 60% பேர் BC, SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் முதல்வரும், ஜெகனின் தந்தையுமான ராஜசேகர ரெட்டியால் கடந்த 2004ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தொடர்புடைய தகவல்கள் கூறுகின்றன.

அமைச்சரவைக் கூட்டம், வெலாகபுடியிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பொருளாதார தாராளமய கொள்கை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதன் விளைவாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய பென்ஷன் திட்டம் நீக்கப்பட்டு, சிபிஎஸ் எனப்படும் இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-