ஐதராபாத்,

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.117 கோடி சொத்து முடக்கப்படுவதாக அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது, அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக சொத்துக்களை குவித்ததாக ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது.

ராஜசேகர ரெட்டி ஆட்சியின்போது, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக தொழில் துறைகளில் பல்வேறு முடிவுகளை முறைகேடாக எடுத்ததாகவும் கூற்பபட்டது. இதன் காரணமாக ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி பயனடைந்தாகவும் கூறப்பட்டது.

இதன் காரணமாக ஜெகன்மோகன் ரெட்டி மீது,  சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.117 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் மேலும்  இந்து புராஜக்ட்ஸ், எம்பசி பிராபர்ட்டி டெவலப் மெண்ட்ஸ், வசந்தா புரா ஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின்அ சையும், அசையாக சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் 2 சொத்துக்களை முடக்கி வைத்துள்ள அமலாக்கத் துறை, தற்போது 117 கோடி மதிப்புள்ள சொத்தையும் முட்க்கி உள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.