கடப்பா: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியினுடைய குடும்ப சொத்து மதிப்பு ரூ.510 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் புதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தையின் நினைவாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவரானார்.

தற்போதைய சட்டசபை தேர்தலுக்காக, தனது சொந்த மாவட்டமான கடப்பாவின் புலிவேந்துலா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், இவரின் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு ரூ.375 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது மனைவி பாரதி பெயரில் ரூ.124 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், இரண்டு மகள்களின் பெயரில் ரூ.6.5 கோடி மற்றும் ரூ.4.6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தமாக, ரூ.510 கோடி சொத்துக்கள் அந்தக் குடும்பத்திற்கு உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், அவர்களுக்கான கடனாக ரூ.66.7 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டியின் தொழில் அரசியல் மற்றும் பொதுச்சேவை என்றும், அவர் மனைவி பாரதி தொழிலதிபர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி