ஜெகத்ரட்சகனுக்கு ‘சீட்’இல்லை..
ராஜ்யசபா தருவதாக ஸ்டாலின்
சமாளிப்பு..


கருணாநிதி இருந்த போது தி.மு.க.வில் கோலோச்சிய ஒரு சிலர்களில் ஜெகத்ரட்சகனும் ஒருவர்.அவரை மத்திய அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்தார்-கலைஞர்.
இப்போது- அவர் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது ஜெகத்ரட்சகனின் திட்டம்.ஆனால் ,அவருக்கு ‘சீட்’ கொடுக்க சபரீசன்,எ.வ.வேலு, பொன்முடி,ஆ.ராசா ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஆலோசனையே தி.மு.க.வில் இப்போது எடுபடுகிறது.எனவே ஜெகத்ரட்சகனுக்கு’நோ’ சொல்லி விட்டார்-ஸ்டாலின். ராஜ்யசபா சீட் தருவதாக அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
ஜெகத்ரட்சகன்-மாற்று கட்சி ஆட்களை பணத்தால் வாங்கி எப்படியும் எம்.பி.ஆகி விடுவார்.அப்புறம்-மத்திய அமைச்சர் பதவி கேட்டு பிடிவாதம் பிடிப்பார். தி.மு.க.வில் ஏற்கனவே அமைச்சர் கனவில் டி.ஆர்.பாலு,ஆ.ராசா,தயாநிதி மாறன்,பழனி மாணிக்கம், ரகுபதி ஆகிய மாஜிக்களோடு கனிமொழி,சபரீசன் ஆகிய புதிய முகங்களும் உள்ள நிலையில்- ஜெகத்ரட்சகனுக்கு இடம் அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் எம்.பி.சீட்டே மறுக்கப்படுவதாக தகவல்.

—பாப்பாங்குளம் பாரதி