ஜெகத்  வீட்டில் ரெய்டு: கருணாநிதி கண்டனம்

சென்னை:

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 40 கிலோ தங்கம் மற்றும் ரூ18 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமாக ரூ600 கோடி சொத்துகளை ஜெகத்ரட்சகன் வாங்கிக் குவித்துள்ளதும் சோதனையில் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜகத் வீட்டில் ரெய்டு
ஜகத் வீட்டில் ரெய்டு

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

“திரு.ஜெகத்ரட்சகன் அவர்கள் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித் துறையினரின் நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது!

வருமான வரித் துறை சோதனை என்ற பெயரில் மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகனை இல்லத்தில் சிறைக் கைதி போல் அடைத்து வைத்திருப்பது முறைதானா?

திரு.ஜெகத்ரட்சகன் அவர்கள் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகக் கூறி மூன்று நாட்களாக அவரை சிறைக்கைதி போல வீட்டி லேயே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

வருமான வரித்துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ, அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை.

ஜகத்ரட்சகன் - கருணாநிதி
ஜகத்ரட்சகன் – கருணாநிதி

ஆனால், திரு. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள் வதாகக் கூறி அனைத்து இடங்களிலும் அதிகாரி களை அனுப்பிய பிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகன் அவர்களை, அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும் ((illegal Detention).

வருமான வரித் துறையினரின் இத்த கைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகளை அனுப்பி சோதனையை விரைவுபடுத்தாமல், ஜெகத்ரட்சகன் அவர்களை கடந்த 3 நாட்களாக இரவு பகல் பாராமல் வீட்டில் கைதி போல் அடைத்து வைத்திருக்கும் வருமான வரித்துறை யினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மேலும், யாரிடமாவது இதுவரை வரி செலுத்தாத வருவாய் ஏதேனும் இருந்தால், வரும் 30.9.2016 க்குள் வருமான வரி செலுத்தி நேர் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தற்போது திரு.ஜெகத்ரட்சகன் அவர்களின் வீட்டில் மேற்கொள்ளப்படும் வருமான வரித் துறையினரின் நடவடிக்கை வியப்பளிக்கிறது” இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.