ராமர் கோயிலை அலங்கரிக்க தமிழகத்தில் இருந்து சென்ற ’’ராட்ஷத மணி’’..

 

லக்னோ :

த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட ஆலயம் அமைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் பொருத்துவதற்காக சென்னையை சேர்ந்த சட்ட உரிமைக்குழு என்ற அமைப்பு, ராட்ஷத மணியை அளித்துள்ளது. இந்த மணி கடந்த மாதம் 17 ஆம் தேதி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ராமர் ரதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

10 மாநிலங்கள் வழியாக சுமார் நான்காயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் பயணித்து இந்த ராட்ஷத மணியை சுமந்து சென்ற ரதம், நேற்று அயோத்தி போய் சேர்ந்தது.

ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் இந்த மணியை சட்ட உரிமை குழுவை சேர்ந்த ராஜலட்சுமி மாதா ஒப்படைத்தார்.

613 கிலோ எடை கொண்ட இந்த மணி 4 அடி உயரம் உள்ளது. மணியின் மேல் பகுதியில் ‘’ஜெய் ஸ்ரீ ராம்‘’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலின் முகப்பில் பொருத்தப்படும் இந்த மணி ஓசை, அயோத்தி நகரில், கோயிலை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும்.

மணி அடிக்கும் போது ‘’ஓம்’’ என்ற சொல் எதிரொலிக்கும் வகையில் விஷேசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

– பா.பாரதி