டில்லியில் சமண மத துறவி முனி தருண் சாகர் காலமானார்

டில்லி:

சமண மத துறவி முனி தருண் சாகர் இன்று டில்லியில் காலமானார். அவருக்கு வயது 51. இவரது இயற்பெயர் பவன் குமார் ஜெயின்.

1967ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி மத்திய பிரதேசத்தில் பிறந்தார். 1981ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி துறவியானார். சமய சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார். இவர் மீது மதிப்பு கொண்ட பக்தர்கள் அதிகம். சில மாதங்களாக மஞ்சள் காமாலை மற்றும் சில உடல் பாதைகளால் பாதிக்கப்பட்டார்.

டில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளித்தும் பலனளிக்கவில்லை. கிழக்கு டில்லியின் கிருஷ்ணா நகர் ராதாபுரி ஜெயின் கோவிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது. சில தினங்களாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாததால் உடல்நிலை மேலும் பாதித்துள்ளது. இதையடுத்து அவரை ராபுரி ஜெயின் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஜைன முறைப்படி உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமயச்சடங்கை (சந்தாரா) மேற்கொள்ளும் முடிவை துறவி தருண் சாகர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலுக்கு உத்தர பிரதேச தருன்சாகரத்தில் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.