https://twitter.com/jaipur_police/status/1248175433213816832

2009-ம் ஆண்டு அபிஷேக் பச்சன், சோனம் கபூர், அதிதி ராவ் நடிப்பில் ‘டெல்லி 6’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைபில் வெளியான பாடல் மசக்களி.

தற்போது ‘மர்ஜாவன்’ படத்துக்காக ‘மஸக்கலி’ பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தினர்.

நேற்று (ஏப்ரல் 8) இணையத்தில் வெளியான இந்த பாடலுக்கு கடும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் காவல்துறை ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றுபவர்களை எச்சரிக்க உங்களை ஒரு அறையில் அடைத்து ‘மஸக்கலி 2.0’ பாடலை திரும்பத் திரும்ப போடுவோம்’ என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர் காவல்துறையின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறியுள்ளது.