புதுடெல்லி: மத்திய மோடி அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்து கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், ‘சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் ஒரு தேவையற்ற சுமை’ என்ற மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது அரசின் நடவடிக்கைகள் என்றுள்ளார்.
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர் ஜெய்ராம் அமைச்சர். இவர் தற்போது, அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற கமிட்டிக்கு தலைவராக உள்ளார்.
மத்திய அரசின் புதிய வரைவு அறிவிக்கை, மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை அலட்சியம் செய்வதாய் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புதிய வரைவு அறிவிக்கை, தற்போது பொதுமக்களின் கருத்துக் கேட்பு என்ற சம்பிரதாய நிகழ்வுக்கு விடப்பட்டுள்ளது. பின்னர், அதற்கு அரசின் இறுதி அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.