காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழு தாக்குதலில் 20 வீரர்கள் பலி

புல்வாமா

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த திடீர் தீவிரவாத தாக்குதலில் 20 பேர் பலியானதற்கு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

பயங்கரவாதி அதில்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 50 வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த அவந்திப்போரா என்னும் இடத்தில் வாகனங்கள் சென்ற போது திடீர் என தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் வெடிகுண்டுகள் வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இவ்வாறு குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் நிலைகுலைந்த சிஆர்பிஎஃப் படை வீரர்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 -45 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் வருடம் நடந்த உரி தாக்குதல்களை விட தீவிரமான தாக்குதல் என கூறப்படுகிறது.

பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மற்றும் இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய  தற்கொலைப்படை வீரர் பெயர் அதில் அகமது தார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்பு அதில் அகமது தார் தாக்குதல் குறித்து விவரித்த வீடியோவையும் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் வெளியிட்டுள்ளது.

 

Photo courtesy : India Today

 

Leave a Reply

Your email address will not be published.