ஆசிய பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் தமிழக வீராங்கனை வெள்ளி வென்று சாதனை

ஆசிய பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளர். ஈட்டி எறிதலில் தமிழகத்தின் ரம்யா வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

Ramya

இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளர். ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற ரம்யா 31.51 மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து 2ம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உஸ்பெகிஸ்தான் வீராங்கனை 34.10மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தையும், ஐக்கிய அரபு எமீரத்தின் வீராங்கனை 3ம் டம் பிடித்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.