பிரபல என்.டி.டி.வியில் “இந்தியாவின் பன்முகத்தன்மை” என்பதை அடிப்படையாக வைத்து விவாத நிகழ்ச்சி நடந்தது.

பிரணாய் ராய் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சசி தரூர், பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ், மாற்றுத் திறனாளி ஆர்வலருமான மாளவிகா ஐயர் , ஜெர்மனியைச் சேர்ந்த இந்திய ஆய்வாளர் பேராசிரியர் டீட்ரிச் ரீட்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

சசிதரூர் பேசும்போது “ஒற்றை இந்தியா” என்கிற கண்ணோட்டம் நாட்டின் பலமான பன்மைத்தன்மையைச் சீர்குலைக்கிறது” என்று தெரிவித்தார்.

அதே நேரம் பிரபல சாமியார் ஜக்கி, “தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையின் தன்மை மாறிவிடக்கூடாது” என்பதாக பேசினார்.

அதாவது, இங்கே இந்து மதத்தவரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.. இது குறைந்துவிடக்கூடாது என்கிற அர்த்தத்தில் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து இதே கருத்தை முன்வைத்தார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத சசிதரூர், “புள்ளிவிபரப்படி இந்தியாவில் 80 சதவீத மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான். இந்த விகிதாச்சாரம் மாறப்போவதில்லை. இதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுதானே உங்களைப் போன்றவர்களின் வேலையாக இருக்க வேண்டும். ஆனால் எப்போது நீங்கள் பயத்தைப் பரப்பும் வியாபாரியாக மாறினீர்கள்” என்று கேட்டார்.

நாடு முழுதும் நதிகளை இணைப்போம் என்று புறப்பட்டிருக்கும் ஜக்கி சாமியார், மனிதர்களை பிரித்துவிடுவார் போலிருக்கிறது!