ஜலந்தர்: என் அப்பா கஷ்டப்பட்டு வாங்கி தந்த போன், அதை இழக்க என்னால் முடியாது என்று வீரதீர சிறுமி குசம்குமாரி கூறி உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி குசம்குமாரி. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சாலையில் நடந்து செறு கொண்டிருந்த போது அவரின் கையிலிருந்த ஸ்மார்ட்போனை பைக்கில் வந்த இருவர் பறித்து தப்பிச் செல்ல முயன்றனர்ர்.

உடனே உஷாரான குமாரி, அவர்களில் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து தப்பிக்க விடாமல் செய்தார். குசம்குமாரியை அந்த நபர் தாக்கியதையும் பொருட்படுத்தாமல் பிடிக்க முயன்றனார்.

அப்போதும் அவரின் பிடியில் இருந்து அந்த நபர் தப்பிக்க முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் அருகில் வீடுகளில் இருந்தவர்கள் அவருக்கு உதவி செய்ய, வழிப்பறி மாட்டிக் கொள்கிறார். அவருடன் வந்த மற்றொரு தப்பினார்.

இதுபற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இது குறித்து சிறுமி குசம் குமாரி கூறியதாவது:

கொரோனாவல் எங்கள் குடும்பம் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. எனக்கு இந்த ஸ்மார்போன் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. என் ஆன்லைன் கல்வி கெடக்கூடாது என்பதற்காக கூலி வேலை செய்து அந்த போனை வாங்கி கொடுத்தார்.

அது விலை மதிப்பில்லாதது. என் போன் போனால் நான் எப்படி படிப்பேன்? என் ஆசிரியர்கள் அனுப்பி உள்ள அனைத்து பாடங்கள்,நோட்ஸ் பற்றிய குறிப்புகள் அதில்தான் உள்ளன. அது இல்லாவிட்டால் என்னால் படிக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணுகிறேன்.

எந்த தருணத்திலும் என் வயதை ஒத்தவர்கள் எதற்காகவும் பயப்படக்கூடாது. எல்லாவற்றையும் எதிர்த்து போராடுங்கள், நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.