ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரஸ் திமுகவே காரணம்!:  பொன். ராதாகிருஷ்ணன்

சென்னை:

“ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட காரணம் காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும்தான். இந்த கட்சிகள் மத்திய ஆட்சி அதிகாரித்தில் இருந் 2011ல்தான் தடை ஏற்பட்டது” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தி.மு.க. இன்று ஜல்லிகட்டு தடையை நீக்கக்கோரி போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றத்தான். அக் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலில் போராட்டம் நடத்துகிறாராம்.  ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் போராட்ட களமாக மாற்றுவது தவறு.

இந்த போராட்டத்தில் காங்கிரஸும் கலந்துகொள்கிறது. 2011ல் ஜல்லிக்கட்டு தடை ஏற்பட காரணமான காங்கிரஸ் கட்சி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

போராட்டம் நடத்தவேண்டிய இடம் வாடிவாசல் அல்ல. அதற்கான களம் டில்லிதான். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடக்கும் வழக்கில் இவர்கள் உதவுகிறார்களா, பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுகிறார்களா என்று மக்கள் கேட்க வேண்டும்” இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி