மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே

டில்லி,

ல்லிக்கட்டு வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பபதால், மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது  மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய சுற்றுசூழல் அமைச்சர் அணில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும், இளைஞர்கள்,  மாணவர்கள் கிளர்த்தெழுந்து வருகின்றனர். இதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தடையை மீறி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில் இன்று டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த  மத்திய அமைச்சர்,  ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆதரவு மற்றும் எதிர் தரப்பிடம் கருத்து கேட்கப்படும் என தெரிவித்துள்ளார்

ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது: மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே.