தமிழக பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு? செங்கோட்டையன்

--

ஈரோடு:

மிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து, தமிழக பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டுப் போட்டி, மஞ்சு விரட்டு, எருது விடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கொங்கு மண்டலமான ஈரோட்டில் கடந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2வது முறையாக நடைபெறும் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  தமிழர்களின் பாரம்பரியமான வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அனுமதிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டும் என்றார்.

ஏற்கெனவே உள்ள பாடத்திட்டம் கடுமையாக இருப்பதாக கல்வியாளர்கள் கூறி வரும் நிலையில்,  ஜல்லிக்கட்டு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே குறித்து தெளிவுப்படுத்திடவும், விழிப்பு ணர்வை ஏற்படுத்திடவும் குறுந்தகடுகள் வழங்கப்படும் என்றார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதைப் போல் சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்கு குறித்து முடிவு செய்ய முதல்வரின் எடுத்துச் செல்லப்படும் என்றார்.