ஜல்லிக்கட்டு: ரெயில் மறியலில் குதித்தனர் இளைஞர்கள்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக இளைஞர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியஅரசு அவசர சட்டம் இயற்ற முடியாது என்று கைவிட்டுவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக ரயில் மறியல் போராட்டத்தில் இறங்கி உள்ளனர் இளைஞர்கள்.

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலை மறித்தனர். இதேபோல் சேலம் ரயில் நிலையத்தில், காரைக்கால்-பெங்களூரு ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞர்கள் மத்திய அரசுக்கும் பீட்டாவுக்கும் எதிராக முழக்கமிட்டனர். மதுரையிலும் இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கார்ட்டூன் கேலரி