ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்: நமது பாதுகாப்பே முக்கியம்! போராட்டத்தை கைவிட நடிகர் சிம்பு வேண்டுகோள்!

simbu
சென்னை,
நான் எப்போதும் உங்கள் பின் வருவேன்… தற்போது நமது பாதுகாப்பே முக்கியம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என போராட்டக்காரர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் கூறியுள்ளார்.

இன்று அதிகாலை முதலே ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
மேலும் வெளியேற மறுக்கும் இளைஞர்கள்மீது தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து, நடிகர் சிம்பு தனது ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசுகையில்,
போராட்டத்தை கைவிட இளைஞர்கள் கால அவகாசம் கேட்டனர். அதை வழங்கியிருக்கலாம். ஆனால், எப்படியாவது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நடவடிக்கையிலேயே காவலர்கள் இருந்தனர்.
தற்போது கூட, நான் மெரினாவுக்குதான் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், சாலைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

நமது போராட்டம் கிட்டதட்ட வெற்றியடைந்து விட்டது என்பது என் கருத்து.
இது தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம். யார் பின்னாலும், யாரும் வரவில்லை. இதற்கு யாரும் தலைமை தாங்கவில்லை. அதனால் போராட்டத்தைக் கைவிட சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை.

இந்த சூழலில் நம் பாதுகாப்பே முக்கியம். அதனால், தற்போதைக்கு போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
கோரிக்கை நிறைவேற்றாவிடின் மீண்டும் கூடுவோம். நான் எப்போதும் உங்கள் பின் வருவேன்’ என்றுக் கூறியுள்ளார்.