ஜல்லிக்கட்டு போராட்டம்: விசாரணை கமிஷனுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்!

சென்னை:

ல்லிக்கட்டு போராட்டம் மற்றும் வன்முறை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.   சென்னை மெரினாவில் நடைபெற்ற தொடர் போராட்டம் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.

இந்த போராட்டம் முடிவடைந்தபோது, வன்முறை ஏற்பட்டது. மெரினா கடற்கரை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போராட்டத்தின் போது திடீரென கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் தமிழகஅரசு விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க கோரியது.

அதைத்தொடர்ந்து, நீதிபதி நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து விசாரித்து வருகிறது.  1000க்கும் மேற்பட்டோரிம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆணையத்துக்கான காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து மேலும் 3 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Remove term: about jallikattu violence about jallikattu violence
Remove term: The Judge Rajesvaran beginning of the trial The Judge Rajesvaran beginning of the trial

You may have missed