சென்னை: இருபது வாகனங்களை எரித்தனர் போராட்டக்காரர்கள்!

சென்னை,

ல்லிக்கட்டு போராட்டக்காரர்களை இன்று பலவலந்தமாக காவல்துறையினர் அப்புறப்படுத்திய தால் சென்னை போராட்டக்களமாக மாறியது.

ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என மெரினா கடற்கரையில் போராடி வகிறார்கள் சிலநூறு இளைஞர்கள். இவர்களுக்கு ஆதரவு தர மேலும் சிலநூறு இளைஞர்கள் வந்தனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்தபோது, அந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
இந்த நிலையில் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்துக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இருபது வாகனங்களை போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்திவிட்டனர்.
இந்த நிலையில் “ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது” என்று தகவல் பரவி பதட்டத்தை அதிகப்படுத்தப்பட்டது.

ஆனால் காவல்நிலையம் எரிக்கப்பட்டது என்ற தகவலை காவல்துறை தரப்பில் மறுத்து்ள்ளனர்.
தற்போது இருசக்கரவாகனங்கள் கொளுந்துவிட்டு எரிகின்றன.

அப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.