முதல்வர் ஓ.பி.எஸ்., டில்லியில் முகாம்! ஜல்லிக்கட்டு தடை நாளை விலகும்?

ஜல்லிக்கட்டு தடையை மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்து நீ்க்க வேண்டும் என்று கோரி, இன்று பிரதமர் மோடியை டில்லியில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். சந்தித்தார். ஆனால் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்தால் மத்திய அரசு தற்போதைக்கு ஏதும் செய்ய இயலாது என்று மோடி தெரிவித்தார்.

இதற்கிடையே இன்று தமிழகம் திரும்புவதாக இருந்த தமிழக முதல்வர் ஓபிஎஸ், தொடர்ந்து டில்லியில் முகாமிட்டுள்ளார்.

பாலகிருஷ்ணா ரெட்டி

நாளை அவர், குடியரசு தலைவர் பிரனாப்முகர்ஜியை சந்தித்து, ஜல்லிக்கட்டு குறித்த கோரிக்கையை வைப்பார் என்று தெரிகிறது. மேலும் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியை, ஓ.பி.எஸ்., டில்லிக்கு வருமாறு அழைத்ததால், அவர் கிளம்பிச் சென்றுள்ளார். மேலும் முக்கிய அதிகாரிகள் சிலரும் டில்லி சென்றுள்ளனர்.

அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு தடையை விலக்கமுடியும் என்று மத்திய செலிட்டர் ஜெனரல் இன்று கருத்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே, ஜல்லிக்கட்டு குறித்த நல்ல தகவல் நாளை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.