Random image

ஜனவரி 15ந்தேதி தொடங்குகிறது ஜல்லிக்கட்டு: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை:

மிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல்வேறு போராட்டகளுக்கு இடையே கடந்த ஆண்டு முதல் மீண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தைப்புத்தாண்டை வரவேற்றும், விவசாயிகள் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடியும் வரவேற்கும் தமிழ் சமுதாயத்தினர் பாரம்பரியமான  ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டையும் காலம் காலமாக விளையாடி வருகின்றனர். மதுரை அருகே நடை பெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், இந்த விளையாட்டின்போது மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக பல்வேறு அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, அதை விசாரித்த  உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு  தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து தமிழகமே திரண்டது. அதையடுத்து, ஜல்லிக் கட்டு நடத்தும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு கடந்த ஆண்டு முதல் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், நிபந்தனைகளுடனும் நடைபெற்று வரு கிறது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில், இன்னும் 15 நாளில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகமாக நடைபெறும் மதுரை மாவட்டத்தில், போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மதுரை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 15-ம் தேதி மதுரை – அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பால மேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.