சென்னை,

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக  தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று திமுகவினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக இன்று சென்னை வந்த ரெயில்கள் அனைத்தும் பல மணி நேரம் தாமதமாகவே வந்து சேர்ந்தன. அதுபோல்  பல ரெயில்களும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தாமதமானது.

அதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி, ராமேஸ்வரம் சேது ரயில்,  தூத்துக்குடி முத்துநகர் ரயில் ல் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை பொதிகை ரயில், மதுரை பாண்டியன், ராமேஸ்வரம் மற்றும் மங்களூர் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எஸ்பிரஸ் ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல் கோவை – நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிஜாமுதீன் – மதுரை சம்பர்காந்தி எஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும். குருவாயூர் – சென்னை ரயில் திருச்சி – சென்னை வரை இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து நேற்று புறப்பட்ட குருவாயூர் ரயில் நாகர்கோவிலில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்கத்தில் குருவாயூருக்கு பதில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை வரும்,   கன்னியாகுமரியில் இருந்து சென்னை புறப்பட்ட விரைவு ரயில் நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து இருந்து இரவு 7.05 க்கு பெங்களூர் புறப்பட வேண்டிய விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.