வேலை போனாலும் பரவாயில்லை..ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளிப்பேன் என்று போராட்டத்தில் கலந்துகொண்டு நெகிழ வைத்திருக்கிறார் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரும் போராட்டம் தமிழகம் முழுதும்  தீவிரமடைந்துள்ளது. மதுரை தமுக்கம் மைதானத்திலும் மாணவர்கள் கூடி போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், அப்பகுதியில் பணியில் இருந்த காவல்துறை போக்குவரத்து துணை ஆய்வாளர் (டிராபிக் எஸ்.ஐ.,) சேகரன் என்பவர் சீருடையுடன் போராட்டம் நடத்திய மாணவர்கள் நடுவே வந்து நின்றார். மைக்கை வாங்கியவர், “இந்த போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன்: என்று கூறஇ,  அனைவரையும் பார்த்து கை கூப்பி வணங்கினார்.

இதனை அங்கிருந்த மாணவர்கள் பார்த்து நெகிழ்ந்தனர். தொடர்ந்து பேசிய சேகரன், “இந்த போராட்டம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்றும் எனது வேலையே போனாலும் பராவாயில்லை, நான் உங்களுக்கு ஆதரவு அளிப்பேன்” என்றார்.

சேகரனுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள், “நீங்கள் சீருடை அணிந்துள்ளீர்கள். ஆகவே போராட்டத்தில் பங்குபெற வேண்டாம். உங்கள் குடும்பத்தினரை போராட்டத்தில் கலந்துகொள்ள அனுமதியுங்கள்” என்றஉ வேண்டிக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொள்பவர்களை, கடுமையாக தாக்கும் காவலர்களுக்கிடையே இது போன்ற  உணர்வுபூர்மான காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.