சென்னை,

ந்த ஆண்டு சென்னை அருகே  கல்பாக்கத்தில் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உறுதியுடன் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தமிழக மக்கள் சென்னை மெரினாவில் கூடி போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக புதிய மசோதா கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து சென்னையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும்படி பெரும்பாலோனோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுவரை தென்மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு சென்னை அருகே கல்பாக்கத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஒருசில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் கூறியிதாவது, இந்த ஆண்டு சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என்று கூறினார்.

சென்னை மக்கள் காண்பதற்காகவே கல்பாக்கம் – மார்க் ஸ்வர்ணபூமியில் ஜல்லிட்டு நடத்தப்படு வதாகக் கூறினார்.

ஒருசிலர் கூறுவதுபோல  வணிக நிறுவனங்களின் லாபத்துக்காக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்பதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.