“ என்னால் மூச்சு விட முடியவில்லை “ கொல்லப்படும் போது ஜமால் கூறிய கடைசி வார்த்தை!

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டபோது பதிவான ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் ‘ என்னால் மூச்சு விட முடியவில்லை ‘ என ஜமால் கூறியது பதிவாகியுள்ளது.

Jamal

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி தி வாஷிங்டன் போஸ்டரில் தொடர்ந்து சவுதி அரேபியா இளவரசர் சல்மானை விமர்சித்து எழுதி வந்தார். கடந்த அக்டோபர் மாதம் தனது திருமணம் தொடர்பாக துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற அவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஜமால் மாயமானது தொடர்பாக துருக்கி தீவிர விசாரணை நடத்தி வந்தது.

இதில் ஜமால் சவுதி அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார் என தொடர்ந்து துருக்கு குற்றம் சாட்டி வந்த நிலையில் அதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவ்வபோது வெளியிட்டது. இதற்கிடையில் ஜமாலை நாங்கள் கொலை செய்யவில்லை என முதலில் சவுதி மறுத்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நெருக்கிடியால் ஜமால் கொலை செய்யப்பட்டதை சவுதி ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆடியோவில், “ என்னால் மூச்சு விட முடியவில்லை “ என ஜமால் கஷோக்கி கூறியது கேட்க முடிகிறது. அதுமட்டுமின்றி, ஜமால் கொலை செய்யப்படும் போது அவரின் கடைசில் நிமிடங்கள் குறித்து கொலையாளிகள் செல்போனில் தகவல் தெரிவித்த தகவலும் தெரிய வந்துள்ளது.

மேலும், ஜமால் இறந்த போது அவரது உடலை ரம்பம் கொண்டு அறுக்கும் சத்தமும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஜமால் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என அமெரிகா குற்றம்சாட்டி உள்ளது. அதுமட்டுமின்றி, ஜமால் கசோக்கியின் கடைசி தருணம் பற்றி தகவல்கள் பரிமாறப்பட்ட செல்போன் அழைப்புகள் அனைத்தும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்ததை துருக்கி உளவுத்துறை அமைப்புகள் உறுதி செய்து உள்ளன.

இவ்வாறு அந்த தொலைக்காட்சி ஆடியோ பதிவை வெளியிட்டு தகவல்களை ஒளிபரப்பியுள்ளது.