சென்னை:

டிகர் ரஜிகாந்தை, அவர்து போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினிகாந்த் மீது சிறுபான்மை மக்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிட இருக்கும் ரஜினிகாந்துக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும் என ஆலோசனை கூறப்பட்டது. இதனடிப்படையில் ரஜினிகாந்துடன் ஜமாஅத் உலமா சபை நிர்வாகி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதனையடுத்து ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகளை சந்திக்க ரஜினிகாந்த் நேர ஒதுக்கியிருக்கிறார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகள் தெரிவித்ததாவது:

ரஜினிகாந்திடம் குடியுரிமை சட்டத்தினால் உண்டாகும் பாதிப்பை தெளிவாக விளக்கி கூறினோம். போரடக்கூடிய இஸ்லாமிய மக்களின் அச்ச உணர்வை ரஜினிகாந்த் புரிந்து கொண்டார். இஸ்லாமிய மக்களின் பயத்தை போக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய உள்ளதாக ரஜினிகாந்த் உறுதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.