லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில், உலகளவில் இதுவரை முரளிதரன், ஷேன் வார்னே மற்றும் அனில் கும்ளே ஆகிய மூவர்தான் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். தற்போது, இந்தப் பட்டியலில் நான்காவது வீரராக இணைந்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், தனது எண்ணிக்கையை 598 என்பதாக உயர்த்தினார்,

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில், புதிய சாதனையை செய்வதற்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் அபிட் அலி மற்றும் ஆஸர் அலி ஆகிய இருவரையும் வீழ்த்தியதன் மூலம் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.