110 வருடங்களுக்குப் பிறகு ‘கிங் பேர்’ பட்டம் – ஆண்டர்சனின் மோசமான சாதனை

james-anderson-batting-1479735559-800இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘கிங் பேர்’ என்ற பட்டதை பெற்றுள்ளார்.

‘கிங் பேர்’ பட்டம் என்பது பெருமைக்குரிய பட்டம் அல்ல மோசமான சாதனைக்கு கிடைக்கும் பட்டம். ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும், முதல் பந்தில் டக்-அவுட் ஆகியவருக்கு கொடுக்கப்படும் பட்டம் தான் ‘கிங் பேர்’.

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகியதால் இப்பட்டத்தை பெற்றுள்ளார். 110 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு மோசமான பட்டதை பெரும் இங்கிலாந்து வீரராகவும் மாறியுள்ளார். 1906-ல் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹேய்ஸ், இந்தப்பட்டதை பெற்றார். அதன் பிறகு தற்பொழுது தான் இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்துள்ளது.