ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி மரணம்

ண்டன்

ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் முதல் படமான டாக்டர் நோ பட நாயகி யூனிஸ் கேசன் மரணம் அடைந்தார்.

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மிகவும் புகழ்பெற்றவை.  இவ்வரிசையில் முதலில் டாக்டர் நோ என்னும் படம் வெளிவந்தது.   இதில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த சீன் கானரி பல படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்தார்.

டாக்டர் நோ படத்தில் இவருடன் உர்சுலா ஆண்ட்ரெஸ் மற்றும் யூனிஸ் கேசன் ஆகியோர் நாயகிகளாக நடித்தனர்.   யூனிஸ் கேசன் சீன் கானரியுடன் ஃப்ரம் ரஷ்யா வித் லவ் படத்திலும் வேறு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

தற்போது 90 வயதாகும் யூனிஸ் கேசன் லண்டனில் அமைந்துள்ள தனது வீட்டில் முதுமை காரணமாக மரணம் அடைந்தார்.   யூனிஸ் கேசனின் மரணத்துக்கு  திரையுலகப் பிரமுகர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.