கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்…!

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கேம் ஆஃப் திரோன்ஸ் நாயகன் ஜேம்ஸ் காஸ்மோ இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.