மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு: புற்றுநோய் சிகிச்சையில் புதிய பாதையை கண்டறிந்த ஜேம்ஸ் பி அல்லிசன் மற்றும் டசூகு ஹோஞ்சா வென்றனர்

புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் எட்டியதற்காக அமெரிக்க மருத்துவர் ஜேம்ஸ் பி.அல்லிசன் மற்றும் ஜப்பான் மருத்துவர் டசூகு ஹோஞ்சா ஆகியோருக்கு இந்த ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

nobel

உலகம் முழுவதும் புற்றுநோயால் ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் மக்கள் உயிரிழக்கின்றனர். புற்றுநோய் மனித மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தவும், அது வராமல் தவிர்க்கவும் நவீன காலத்தில் மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நமது உடலில் உள்ள இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தி அதனை தூண்டி, புற்றுநோய்க் கட்டி செல்களை தீவிரமாக தக்கும் வகையில் புதிய சிகிச்சை முறையை இருவர் கண்டுப்பிடித்துள்ளனர்.

ஜப்பானை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி டசூகு ஹோஞ்சோவும், அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன் ஆகியோர் புற்றுநோய் சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் புரோட்டீன் ஒன்று தடையாக இருப்பதை ஆய்வு செய்தார். இந்த தடையை உடைத்து விட்டால் நம் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்றுநோய்க்கட்டிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதை கண்டறிந்தார். புற்றுநோய் சிகிச்சையில் இதுவரை இல்லாத அளவில் புதிய அணுகுமுறைக்கான கருத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கு சமமாக ஜப்பானிய மருத்துவர் டசூகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் புரோட்டீன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதுவும் புற்றுநோய் செல்களுக்கு தடை ஏற்படுத்தும் என்பதை ஆய்வின் மூலம் டசூகு அறிந்தார். இருவரும் வெவ்வேறு முறையில் ஆய்வு மேற்கொண்டாலும், நோய் எதிர்ப்பு சக்தியை செயலாற்ற விடாமல் செய்கிறது என்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அத்தகையை தடையை நீக்கும் சிகிச்சை முறையை இருவரும் மேற்கொண்டனர். இவர்களின் இந்த ஆராய்ச்சிக்காக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.