சுதர்ஷன் டிவி மீது சட்ட நடவடிக்கை – யோசனையில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்!

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தொடர்பாக, முஸ்லீம் விரோத வீடியோவை வெளியிட்ட இந்துத்துவ சுதர்ஷன் டிவி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அப்பல்கலை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “வஞ்சகம் கொண்ட விஷயத்தை ஒளிபரப்பியதற்காக, சுதர்ஷன் டிவி சேனல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்துரையாட ஒரு கூட்டத்தைக் கூட்டினோம்.

ஜாமியா ரெசிடென்ஷியல் கோச்சிங் அகடமியில் இணைந்து பயிற்சிபெற்று, சிவில் சர்வீஸ் தேர்ச்சிபெற்றுள்ள ஒரு தேர்வரும், சுதர்ஷன் தொலைக்காட்சியின் வகுப்புவாத செயலுக்காக அதன்மீது எஃப்ஐஆர் பதிவுசெய்ய வேண்டும்” என்றுள்ளார் ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர்.

“தற்போது இந்த பயிற்சி மையத்தின் மூலம் சிவில் சர்வீஸ் தேறியுள்ள 30 பேரில், கிட்டத்தட்ட பாதி பேர் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பது பலருக்கும் தெரியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.