அயோத்தி விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலாமா சீராய்வு மனுத்தாக்கல்

டெல்லி:

ர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரத்தில், நவம்பர் மாதம் 9ந்தேதி (2019) உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ராமஜென்ம பூமி இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அங்கு ராமர்கோவில் கட்டவும் அனுமதி வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலாமா இ இந்த் அமைப்பு உச்சநிதி மன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அயோத்தி வழக்கில் மூல மனுதாரரான சித்திக்கியின் சட்டப்பூர்வ வாரிசுதாரரான மவுலானா சையது அஷாத் ரஷிதீ என்பவர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜாமியாத் உலாமா இந்த் அமைப்பின் தலைவரான இவர், சீராய்வு மனுத் தாக்கல் செய்வதற்கான உரிமையை நீதிமன்றம் தங்களுக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

இதே போல் அகில இந்திய இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியமும், சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.