காஷ்மீர்: சட்டமன்றம் கலைப்பு!: ஆளுநர் அதிரடி

--

ம்மு காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்து ஆளுநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2014ம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முஃப்தி முகமது சையது முதலமைச்சராகவும், நிர்மல் குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். முஃப்தி முகமது உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதல்வராக, 2016ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். இதனையடுத்து, பிடிபி, பாஜக இடையே சில விசயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கி கொண்டது. இதனால் ஆட்சி கவிழ்ந்தது. குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் சட்டமன்றம் கலைக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு மெஹபூபா கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அந்த கடிதத்தில் மெஹபூபா குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 19 ஆம் தேதி உடன் ஆளுநரின் 6 மாத கால ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், மெஹபூபா மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது முக்கியமாக அரசியல் நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டசபையை ஆளுநர் சத்ய பால் மாலிக் கலைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால், எந்த கட்சியும் கூட்டணி சேர்ந்து இனி ஆட்சி அமைக்க முடியாது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் இனி தேர்தல் வர இருக்கிறது.

#JammuandKashmir #assembly #dissolution #Governor #Sathyabal