டில்லி:

ந்த ஆண்டு இறுதிக்குள்  ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பாஜக தனது ஆதரவை கடந்த ஆண்டு விலக்கிக்கொண்டது. இதையடுத்து, மெகபூபா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து, மாநில சட்டசபை முடக்கப்பட்டு 2018ம் ஆண்டு ஜூன்மாதம் ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  நடப்பு ஆண்டின் இறுதியில் 87 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்   மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதில்,   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமர்நாத் யாத்திரை முடிந்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிக்க ஆளுநர் சத்யபால் மாலிக் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.