ஸ்ரீநகர்:

பெங்களூருவில் இருப்பது போல் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்க ஜம்மு காஷ்மீர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை இந்த ஆண்டு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மசோதா கடந்த 12ம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டக் தொழில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தோடு இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதாக அரசு தெரிவித்துளளது.

மாநில சட்டத் துறை அமைச்சர் அப்துல் ஹக் கான் கூறுகையில், ‘‘1995ம் ஆண்டு நடந்த அனைத்து சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பெங்களூருவில் உள்ளது போல் இந்தியாவின் தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்ட தொழில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை ஆய்வு மேற்கொள்ளும். பல மாநிலங்கள் ஏற்கனவே இதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது’’என்றார்.