ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.

பாதிப்புகளின் அளவீடுகளை பொறுத்து, தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்து, கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வருகின்றன. இந் நிலையில் ஜம்மு காஷ்மீரில் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் கட்டுப்பாடுகளை 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் ஆண்டு வரை நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளது.

கடந்த முறை லாக்டவுன் அறிவிப்புகளின் போது வெளியிடப்பட்ட அதே கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.