ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! பாதுகாப்பு படை அதிரடி

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் நடைபெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடி வந்தனர்.

அப்போது, அங்கிருந்து தப்பிக்க முயன்ற பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவார தப்பியோட முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு படையினர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.