புல்வாமாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு! 2 பயங்கரவாதிகள் பலி

ஸ்ரீநகர்:

புல்வாமா தலிபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற  துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளும், ஒரு ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாத தற்கொலைப் படை தாக்குதலில் ஏராளமான சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், புல்வாமா அருகே உள்ள தலிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் மற்றும் சிறப்பு நடவடிக்கை குழு படைவீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே சில மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 1 ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் மேலும் 2 ராணுவ வீரர்கள் பொதுமக்களில் ஒருவரும் காயம் அடைந்தனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2 terrorists dead, Jammu Kashmir, Pulwama Dalipora area
-=-