கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி

தானும் சாகக்கூடும் என உணர்ந்திருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவோர், டாக்டர்கள்.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 196 டாக்டர்கள் உயிர் இழந்த நிலையில் நேற்று ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு டாக்டர் மரணம் அடைந்துள்ளார்.

அவர் பெயர், முகமது அஷ்ரப் மீர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்போர் என்ற இடத்தை சேர்ந்த டாக்டர் மீர், அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த நாள் முதலாகவே, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தார்..

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக, இரவு-பகல் பாராது பணியில் ஈடுபட்ட டாக்டர் மீரையும் கொரோனா வைரஸ், பற்றிக்கொண்டது.

ஸ்ரீ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டாக்டர் மீர், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்து போனார்.

அவரது மறைவு காஷ்மீரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் , டாக்டர் மீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

-பா.பாரதி.