7 மாதம் வீட்டுக்காவல்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா விடுதலை….

ஸ்ரீநகர்:

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பொதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு,வீட்டுக் காவலில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்வதாக காஷ்மீர் அரசு அறிவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குகுரிய சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு 5ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து, காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்பட ஓமர் அப்துல்லா, மெகபூபா முக்தி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள்  பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக  மத்தியஅரசு தெரிவித்திருந்தது.

சுமார் 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது பரூக் அப்துல்லாவை மீதான காவலை விலக்கிக்கொள்வதாக காஷ்மீர் அரசு அறிவித்து உள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் அதற்கான உத்தரவை வெளியிட்டு உள்ளார்.