ஜம்மு – காஷ்மீர் சட்டசபையை உடனடியாக கலைக்க வேண்டும் : உமர் அப்துல்லா

ஜம்மு – காஷ்மீர் சட்டசபையை உடனடியாக கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த உமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான உமர் அப்துல்லா தற்போது உள்ள சட்டசபையை உடனடியாக கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூன்று வருடங்களாக பாஜக கூட்டணியில் ஆட்சி நடத்தும் அரசை முறித்து கொண்டு காஷ்மீரில் ஜனாபதி ஆட்சியை இன்று காலை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து டிவிட்டரில் உமர் அப்துல்லா கூறியதாவது,” தற்போது உள்ள ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு நம்பகத்தன்மை உடையதாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
umar abdhulla
காஷ்மீரில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. எங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு வந்தோம். மக்கள் அதனை கவனித்து கொண்டு தான் இருந்தார்கள் என ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தா கூறியுள்ளார். குப்தாவின் இத்தகைய கருத்து ஜம்மு – காஷ்மீரில் பிற கட்சிகள் ஆட்சி அமைப்பதை கலைக்கும் விதமாக இருப்பதாக உமர் அப்துல்லா குற்றம்சட்டியுள்ளார். மேலும் உமர் டிவிட்டரில் “ நாங்கள் எங்கள் பணியை செய்துள்ளோம்” என்று குறிப்பிடுவதற்கான அர்த்தம் என்ன ? என்றும், காஷ்மீரில் பிற கட்சிகள் ஆட்சி அமைப்பதை உடைத்து பாஜகவை வலுப்படுத்த முயற்சிக்கிறீர்களா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக கூட்டணியில் ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வந்த ஆட்சியை வெளியேற்றுவது குறித்த முடிவை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கட்சி வட்டாரத்தில் தெரியப்படுத்தவில்லை என்ற அறிக்கை உண்மையானால் அது எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் எனவும் உமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்