Random image

காஷ்மீர்: அக்.,8 முதல் 4 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் 4 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 8,10, 13, 16ம் தேதிகள் என 4 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்என்று தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அச்சம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்திருப்பதாக அக்கட்சி அறிவித்திருந்த குறிப்பிடத்தக்கது.