ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் 10 காவலர்கள் சிக்கிய நிலையில் 7 பேர் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை)  காஷ்மீரின் சில பகுதிகளில் பெய்த திடீா் பனி மழையால் சாலைகளில் பனி தேங்கி போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அன்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது.

அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த காவல்துறையினர் மீது பனிப்பாறைகள் உருண்டு விழுந்து அவர்களை மூடியது. இதில் சுமார் 10 பேர் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்களை மீட்கும்பணியில் ராணுவத்தினர் உடனடியாக களமிறங்கினர். இதில், 3 போ் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உடல் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டது.

மீதமுள்ள 3 பேரை தேடி வந்த நிலையில், தற்போது அவர்களின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையை சேர்ந்த  7 போ் உயிாிழந்த சம்பவம் மற்ற காவலர்களிடையே பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.