ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலச்சரிவு: ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள திடீர் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஷபன்பாஸ் பனிஹாலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இன்று அதிகாலை 3 மணி முதல் மூடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் டேங்கர் லாரி சிக்கியுள்ளதால், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஜம்மு-காஷ்மீர் அரசும், பேரிடர் மேலாண்மை ஆணையமும் கூறி உள்ளன.

சாலைகளிலுள்ள இடிபாடுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் அவை முடிந்து போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே லடாக், கில்கிட், பால்டிஸ்தான், முசாபராபாத், இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் மழையும், பனிப்பொழிவும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.